Published : 21 May 2015 02:02 PM
Last Updated : 21 May 2015 02:02 PM

அயல் சினிமாவில் தடம் பதிக்கத் தயாராகும் தனுஷ்!

மர்ஜன் சத்ராபி என்ற பெர்சிய பெண் இயக்குநரின் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் தனுஷ். இதுகுறித்த அறிவிப்பை கான்ஸ் திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்களிடம் சத்ராபி தெரிவித்தார்.

‘The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe’ என்ற ரோமானிய மொழி நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

ஃபகிர் என்ற மோசடி செய்பவனின் கதையே இந்த நாவல். டெல்லியிலிருந்து பிரான்ஸ் சென்று, அங்கு ஒரு பெர்சிய பெண்ணைக் காதலித்து, ஆப்பிரிக்க அகதி என தவறாக அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுகிறான் ஃபகிர். மூன்று கண்டங்களைத் தாண்டி இருக்கும் அவனது பயணமே இந்தக் கதை.

ஃபகிர் பாத்திரத்தில் நடிக்கவே நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சத்ராபி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பெர்ஸேபோலிஸ், தி வாய்ஸஸ் போன்ற இவரது திரைப்படங்கள், விமர்சகர்களால் பெரிதும் பாரட்டப்பட்டு, சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தகது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x