Last Updated : 23 Apr, 2015 11:51 AM

 

Published : 23 Apr 2015 11:51 AM
Last Updated : 23 Apr 2015 11:51 AM

அஜித் வீட்டில் தவழும் தனித்துவன்

தனது இரண்டாவது குழந்தைக்கு 'ஆத்விக்' என்று பெயரிட்டு இருக்கிறார் நடிகர் அஜித்

நடிகர் அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு மார்ச் 2-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, அந்தத் தம்பதியை வாழ்த்தும் வகையில், அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #KuttyThala என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்ட்டானது.

அக்குழந்தைக்கு என்ன பெயரிட்டு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. தற்போது அக்குழந்தைக்கு ஆத்விக் ' என்று பெயரிட்டு இருப்பதாக அஜித் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

'ஆத்விக்' என்றால் தனித்துவமானவன் என்று அர்த்தமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x