Last Updated : 27 Feb, 2016 12:06 PM

 

Published : 27 Feb 2016 12:06 PM
Last Updated : 27 Feb 2016 12:06 PM

இருமுகன் அப்டேட்ஸ்: திருநங்கை கதாபாத்திரத்தில் விக்ரம்

'இருமுகன்' படத்தில் 'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட் மற்றும் திருநங்கை என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் விக்ரம்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் முடிவுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

இப்போது 'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு மட்டுமே நடத்தி வருகிறார்கள். பின்னர், திருநங்கை கதாபாத்திரத்துக்கு தன்னைத் தயார்படுத்த தொடங்குவார் விக்ரம்.

முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இதற்காக திருநங்கைகளின் உடல் அசைவுகள், அவருடைய பேச்சு மொழி உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறார் விக்ரம்.

அவ்வப்போது படப்பிடிப்புக்கு இடையே நேரம் கிடைக்கும் போது, திருநங்கை கதாபாத்திரத்துக்கான விஷயங்களை படித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x