Published : 02 Jul 2018 07:59 AM
Last Updated : 02 Jul 2018 07:59 AM

ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.தியாகராஜன் காலமானார்

‘தேவர் பிலிம்ஸ்’ சின்னப்ப தேவரின் மூத்த மருமகனும், திரைப்பட இயக்குநருமான ஆர்.தியாகராஜன் (74) நேற்று காலமானார்.

சிவக்குமார், ஜெயசித்ரா நடிப்பில் வெளிவந்து வெள்ளி விழா கண்ட ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் ஆர். தியாகராஜன். ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘ரங்கா’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘அன்னை ஓர் ஆலயம்’ உள்ளிட்ட 33 படங்களை அவர் இயக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலான படங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானவை. சென்னை போரூரில் வசித்து வந்த இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் வேல்முருகன் என்ற மகனும், சண்முகவடிவு என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் இன்று காலை 10 மணிக்கு போரூர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

ஆர்.தியாகராஜன் உடலுக்கு பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் எழுத்தாளர்கள் யூனியன் சார்பில் கலைஞானம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x