Published : 22 May 2018 06:54 PM
Last Updated : 22 May 2018 06:54 PM

“பிரதமரே... இப்போதாவது உங்கள் மவுனத்தைக் கலையுங்கள்” - விஷால் வேண்டுகோள்

‘பிரதமரே... தயவுசெய்து இப்போதாவது உங்கள் மவுனத்தைக் கலையுங்கள்’ என நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது அப்பாவிப் பொதுமக்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தப் போராட்டம் சமூக நலனுக்காக நடந்ததேயன்றி, சொந்த நலனுக்காக அல்ல.

50 ஆயிரம் பேர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடுவது என்பது, தூத்துக்குடி மக்களின் நலனுக்கு எதிராக இருப்பதை மிகப்பெரிய மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறது. அன்பான பிரதமரே... தயவுசெய்து இப்போதாவது உங்கள் மவுனத்தைக் கலையுங்கள். ‘போராட்டம் என்பது ஜனநாயகத்தின் வடிவம்’ என பாஜக கூறியிருக்கிறது. அதையே மக்கள் ஏன் செய்யக்கூடாது? அரசு என்பது மக்களுக்காக இருக்க வேண்டும், மற்றவர்களுக்காக இருக்கக்கூடாது. 2019-ல் எச்சரிக்கையாக இருங்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x