Published : 20 May 2018 04:48 PM
Last Updated : 20 May 2018 04:48 PM

போதை மருந்து விற்கும் நயன்தாரா

‘கோலமாவு கோகிலா’ படத்துக்காகப் போதை மருந்து விற்கும் பெண்ணாக நடித்துள்ளாராம் நயன்தாரா.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோலமாவு கோகிலா’. சுருக்கமாக ‘கோ கோ’ என்று அழைக்கின்றனர். ஹீரோயினை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், பிரதான வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ‘எதுவரையோ’ மற்றும் ‘கல்யாண வயசு’ என இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில், ‘கல்யாண வயசு’ பாடலை எழுதி, பாடலாசிரியராக அறிமுகமாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தில், நயன்தாராவிடம் யோகிபாபு காதலைச் சொல்வது போன்ற காட்சிகள் (பாடல்) வெளியாகி, படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், போதை மருந்து விற்கும் பெண்ணாக நடித்துள்ளார் நயன் என்ற தகவல் கிடைத்துள்ளது. வறுமையில் வாடும் நயன், அதிலிருந்து மீள்வதற்காக போதை மருந்து விற்கிறாராம்.

நயன்தாரா தற்போது அஜித் ஜோடியாக ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் படம் என அரை டஜன் படங்களைக் கையில் வைத்திருக்கிறார் நயன்தாரா.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“நான் நடிகனே கிடையாது... ஹீரோ” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x