Published : 20 May 2018 10:06 AM
Last Updated : 20 May 2018 10:06 AM

விஜய் பிறந்தநாளில் ‘டிராஃபிக் ராமசாமி’

அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

டிராஃபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரோகிணி நடித்துள்ளார். சமூக விழிப்புணர்வை மையமாக வைத்து தயாராகியுள்ள இப்படத்தில் சீமான், பிரகாஷ்ராஜ், குஷ்பு, விஜய் ஆன்டனி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோரும் கதையில் ஒவ்வொரு அங்கம் வகிக்கின்றனர். அவர்களோடு, கதையின் திருப்பமாக அமைந்துள்ள கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

படம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறும்போது, ‘‘படத்தின் முழு வேலைகளும் முடிந்துவிட்டன. என் சினிமா வாழ்க்கையில், முழு திருப்திகரமான படமாக இதை கருதுகிறேன். என் வாழ்க்கையும், டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையும் பல இடங்களில் ஒன்றுபோலவே உள்ளது. அதனால், இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் திருப்தியாக உணர்ந்தேன். படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் சங்க விதிகளின்படி 3 தேதிகள் குறித்துக் கொடுத்தோம். ஜூன் 22-ல் ரிலீஸ் செய்யலாம் என்று கடிதம் அனுப்பியுள்ளனர். அன்று விஜய் பிறந்தநாள். மகன் பிறந்தநாளில் என் படம் ரிலீஸ் ஆவதும் மகிழ்ச்சிதானே’’ என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x