Published : 08 May 2018 08:28 PM
Last Updated : 08 May 2018 08:28 PM

ராஜேஷ் - சிவகார்த்திகேயன் பட நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

ராஜேஷ் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தின் நாயகியாகவும் நயன்தாரா நடித்திருந்தார். இப்போது ராஜேஷ் - சிவகார்த்திகேயன் இருவரும் இணையும் கூட்டணியிலும் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கெனவே சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக‘வேலைக்காரன்’ படத்திலும் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்தும் இறுதியானவுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

’சீமராஜா’படத்தைத் தொடர்ந்து ரவிக்குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் இயக்கும் படங்களில் மாறி மாறி நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x