Published : 07 May 2018 05:02 PM
Last Updated : 07 May 2018 05:02 PM

‘பத்மாவதி’யைவிட ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நல்ல படம் - ஜே.சதீஷ் குமார் கிண்டல்

‘பத்மாவதி’யைவிட ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நல்ல படம் என கிண்டலாகத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

கடந்த வாரம் ரிலீஸான அடல்ட் காமெடிப் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில், ஆபாச வசனங்கள் நேரடியாகவே இடம்பெற்றுள்ளன. இது சமூகத்தை சீரழிக்கும் என பலரும் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் படம் என்பது போன்ற விமர்சனங்கள் இந்தப் படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பாரதிராஜாவும் இந்தப் படத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு எதிராக பாரதிராஜா கருத்து

இந்நிலையில், தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாரும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். “சமூக அக்கறையுடன் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு சிறந்த முறையில் சென்சார் செய்த தணிக்கைக்குழு வாரியத்தை வாழ்த்துகிறேன். இளைஞர்களுக்கும் சமூகத்துக்கும் தேவையான நல்ல செய்திகள் அடங்கிய இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கைக்குழு வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

‘பத்மாவதி’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால், இப்போதுதான் தெரிகிறது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைவிட ‘பத்மாவதி’ நல்ல படம் இல்லையென்று. எப்படி, என்ன மாதிரியான படம் எடுக்க வேண்டுமென்று மத்திய தணிக்கைக்குழு வாரியம் இதன்மூலம் தெளிவாகத் தெரிவித்து விட்டது. வழிகாட்டியதற்கு நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜே.சதீஷ்குமார்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x