Published : 05 May 2018 03:29 PM
Last Updated : 05 May 2018 03:29 PM

கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு, தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மதுரவாணி என்ற பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும், விஜய் அந்தோணி என்ற புகைப்படக் கலைஞர் வேடத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர். மேலும், நாக சைதன்யா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். தமிழில் வருகிற 11 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம், தெலுங்கில் இரண்டு நாட்கள் முன்னதாகவே, அதாவது 9 ஆம் தேதியே வெளியாகிறது.

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதன்முதலில் செய்தி வெளியானபோது, பலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், படத்தின் ஸ்டில் ஒவ்வொன்றாக வெளிவர, பலரும் தங்களுடைய விமர்சனங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். படம் பார்த்த பிறகு நிச்சயம் தன்னை சாவித்ரி வேடத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு: மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x