Published : 05 May 2018 08:29 AM
Last Updated : 05 May 2018 08:29 AM

மகிழ்ச்சியில் இந்துஜா

நடிகை இந்துஜா, ‘மெர்க்குரி’ படத்தில் தனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். ‘‘முதலில் தமிழகம் தவிர மற்ற இடங்களில்தான் ‘மெர்க்குரி’ திரைப்படம் ரிலீஸானது. எப்போ இங்கு ரிலீஸ் ஆகும்னு காத்துக்கிட்டே இருந்தேன். ரிலீஸான பிறகுதான் ‘லப்டப்’ ஹார்ட் பீட் சத்தம் குறைந்தது. இது, ‘மேயாத மான்’ படத்தை தொடர்ந்து ரிலீஸான படம். இனி அடுத்தடுத்து வரும் எல்லா படங்களிலும் ஏதாவது தனித்துவம் இருக்கும். மாடர்ன், கிளாமர் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பூமராங்’ படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சி படப்பிடிப்பு பாக்கியுள்ளது. அது விரைவில் தொடங்கும். இன்னும் ஏழெட்டு நாட்கள்தான் நடிக்கவேண்டி உள்ளது. அதைத் தொடர்ந்து, உதயநிதியுடன் இணையும் புதிய படமும் இம்மாத இறுதிக்குள் தொடங்கும். சினிமா வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்கிறது’’ என்கிறார் இந்துஜா.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு: மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x