Published : 05 May 2018 06:39 AM
Last Updated : 05 May 2018 06:39 AM

’மன்னன்’ பாணியில் சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 13-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மொத்தம் 50 நாட்களில் படமாக்கி முடிக்க படக்குழு தீர்மானித்துள்ளது. ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைய உள்ளார். எம்.ராஜேஷின் முந்தைய படங்கள்போல காதல் போட்டி, காமெடி, ஆக்சன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படம் ரஜினியின் ‘மன்னன்’ பட பாணியில் முழுக்க காமெடி களமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரம் கூறுகிறது. ‘மன்னன்’ படத்தில் விஜயசாந்தி கதாபாத்திரம் போல, இப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் இருக்கும் எனவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x