Published : 17 Apr 2018 05:45 PM
Last Updated : 17 Apr 2018 05:45 PM

நம்பர் 1 இடத்தைத் தக்கவைக்கும் நயன்தாரா

9 படங்களைக் கையில் வைத்துள்ள நயன்தாரா, நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொள்வார் என்கிறார்கள்.

‘டோரா’, ‘அறம்’, ‘வேலைக்காரன்’ என கடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸாகின. இந்த வருடம் இதுவரை ‘ஜெய் சிம்ஹா’ என்ற ஒரேயொரு தெலுங்குப் படம் மட்டும் ரிலீஸாகியிருக்கிறது.

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘அறம் 2’, ‘விசுவாசம்’, சர்ஜுன் இயக்கும் படம் என 6 படங்களைக் கையில் வைத்துள்ளார் நயன்தாரா. மேலும், சிரஞ்சீவி ஜோடியாக ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்ல, நிவின் பாலி ஜோடியாக ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ மலையாளப் படத்தில் கமிட்டாகியுள்ள நயன், தற்போது ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாளப் படத்திலும் கமிட்டாகியுள்ளார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தை, மகேஷ் வெட்டியார் இயக்குகிறார்.

நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் நம்பர் 1 நடிகையாகத் திகழ்கிறார் நயன்தாரா. கையில் இத்தனைப் படங்கள் வைத்திருப்பதன் மூலம் இனியும் அதைத் தக்கவைத்துக் கொள்வார் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x