Last Updated : 18 Mar, 2018 12:34 PM

 

Published : 18 Mar 2018 12:34 PM
Last Updated : 18 Mar 2018 12:34 PM

‘உதயநிதி ஸ்டாலினை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்’ - தமன்னா

‘உதயநிதி ஸ்டாலினை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்’ என தமன்னா தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ள இந்தப் படத்தில், சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. மதுரை வாடிப்பட்டியை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொடைக்கானலிலும் நடைபெற்றது.

“நிறைய பேசாமல், நடிகர்களுக்கு கதாபாத்திரத்தை விளக்கி, அவருக்கு என்ன தேவையோ, அதை மிகச்சிறப்பாக வாங்கிவிடுவார் சீனு ராமசாமி. ‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு அவருடைய படத்தில் மீண்டும் நடிக்க ஆவலாக இருந்தேன். உடனடியாக அடுத்த படத்திலேயே அந்த வாய்ப்பு அமைந்துவிட்டது. எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘கண்ணே கலைமானே’ இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலினை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என தெரிவித்துள்ளார் தமன்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x