Last Updated : 14 Mar, 2018 02:41 PM

 

Published : 14 Mar 2018 02:41 PM
Last Updated : 14 Mar 2018 02:41 PM

பி.சி.ஸ்ரீராம், சாந்தனு பாக்யராஜுடன் கூட்டணி அமைக்கும் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடிக்க, ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம்.

மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘துப்பறிவாளன்’. விஷால் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த இந்தப் படத்துக்கு, அரோல் கரோலி இசையமைத்திருந்தார்.

‘துப்பறிவாளன்’ படத்துக்குப் பிறகு தன்னுடைய சகோதரர் இயக்கிய ‘சவரக்கத்தி’ படத்தின் கதையை எழுதி, அதைத் தயாரிக்கவும் செய்தார். அத்துடன், படத்தில் வில்லனாகவும் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் மிஷ்கின். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க சாந்தனு பாக்யராஜ் கமிட்டாகியுள்ளார். ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற இருக்கிறார். ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x