Last Updated : 20 Feb, 2018 11:10 AM

 

Published : 20 Feb 2018 11:10 AM
Last Updated : 20 Feb 2018 11:10 AM

தும்ஹாரி சுலு ரீமேக்: வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா

இந்திப் படமான 'தும்ஹாரி சுலு' தமிழில் ரீமேக்காகிறது. வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் வித்யாபாலன் இயக்கத்தில் வெளியான படம் 'தும்ஹாரி சுலு'. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்கள்.

சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாகிறார். இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். இவ்வாறு நகரும் ‘தும்ஹாரி சுலு’ படம். இதில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை ராதாமோகன் இயக்குகிறார். ‘மொழி’ வெற்றிப் படம் கொடுத்த ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

‘நாச்சியார்’ படத்தைத் தொடர்ந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் கவனம் செலுத்திவரும் ஜோதிகா, அந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் ஏப்ரல் இறுதியில் இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்புக்கு புறப்படுவார் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x