Last Updated : 15 Jan, 2018 12:52 PM

 

Published : 15 Jan 2018 12:52 PM
Last Updated : 15 Jan 2018 12:52 PM

எழில் - விஷ்ணு விஷால் இணையும் ஜகஜால கில்லாடி

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துவரும் படத்துக்கு 'ஜகஜால கில்லாடி' எனப் பெயரிட்டுள்ளார்கள்.

'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் எழில். பெயரிடப்படாமல் நடைபெற்ற இப்படத்தின் தலைப்பை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட்டது படக்குழு.

'ஜகஜால கில்லாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை துஷ்யந்த் தயாரித்து வருகிறார்.

ஒளிப்பதிவாளராக கே.ஜி.வெங்கடேஷ், இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார்கள். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதியுள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x