Published : 10 Jan 2018 01:05 PM
Last Updated : 10 Jan 2018 01:05 PM

பாலாவின் நாச்சியார் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது

பாலாவின் 'நாச்சியார்' பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'நாச்சியார்'. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலா தயாரித்துள்ளார். இப்படத்துக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய பாடலொன்றை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்.

மேலும், நாச்சியார்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாச்சியார் படத்தின் டீஸரை இணையத்தில் சூர்யா வெளியிட்டார். டீஸரின் முடிவில் ஜோதிகா பேசியுள்ள வசைச் சொல்லால் சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு இயக்கங்கள் தங்களுடைய கண்டனத்தையும் பதிவு செய்தன. இது தொடர்பாகப் பேசிய ஜோதிகா, "அந்த டீஸரைப் பற்றி இப்போது பேச வேண்டாம். படம் பார்த்தால் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

தற்போது 'நாச்சியார்' படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x