Last Updated : 13 Dec, 2017 03:37 PM

 

Published : 13 Dec 2017 03:37 PM
Last Updated : 13 Dec 2017 03:37 PM

விஷாலின் இரும்புத்திரை வெளியீட்டு தேதி மாற்றம்

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'இரும்புத்திரை' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொங்கல் வெளியீடு என்று அறிவித்திருந்தது படக்குழு.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 12) 'இரும்புத்திரை' படத்தின் புதிய போஸ்டரை விஷால் வெளியிட்டார். அதில் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஷால் மனுத்தாக்கல் செய்ததால், 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் தான் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்திருக்கிறார்கள். யுவன் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x