Last Updated : 12 Dec, 2017 07:55 AM

 

Published : 12 Dec 2017 07:55 AM
Last Updated : 12 Dec 2017 07:55 AM

ரஜினி பிறந்த நாள்: காலா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, 'காலா' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது தனுஷ்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'காலா'. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, 'காலா' படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது.

இன்று (டிசம்பர் 12) ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, 'காலா' படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'காலா' வெளியீடு குறித்து அப்போஸ்டரில் எதுவும் படக்குழு குறிப்பிடவில்லை.

ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா உள்ளிட்ட படக்குழுவினர் பணிபுரிந்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x