Last Updated : 12 Dec, 2017 07:54 AM

 

Published : 12 Dec 2017 07:54 AM
Last Updated : 12 Dec 2017 07:54 AM

ஆர்யாவின் கஜினிகாந்த் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் 'கஜினிகாந்த்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

’ஹர ஹர மஹா தேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவே தயாரிக்க முன்வந்தார்.

'கஜினிகாந்த்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆர்யாவுக்கு நாயகியாக சாயிஷா சைகல், முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்கள்.

நேற்று (டிசம்பர் 11) ஆர்யா பிறந்த நாளாகும். மேலும், இன்று (டிசம்பர் 12) ரஜினி பிறந்த நாளாகும். ஆகையால் டிசம்பர் 11-ம் தேதி இரவு 11:59-க்கு 'கஜினிகாந்த்' ஃபர்ஸ்ட் லுக்கை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ரஜினி நடிப்பில் வெளியான 'தர்மத்தின் தலைவன்' படத்தைப் போன்று ஆர்யா இருப்பது போன்று 'கஜினிகாந்த்' ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்திருக்கிறது படக்குழு.

பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜி.கே.படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x