Last Updated : 18 Nov, 2017 08:58 PM

 

Published : 18 Nov 2017 08:58 PM
Last Updated : 18 Nov 2017 08:58 PM

நாச்சியார் அப்டேட்: இளையராஜா இசையில் ஜி.வி.பிராகாஷ் பாடல்

பாலாவின் 'நாச்சியார்' படத்துக்காக இளையராஜா இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நாச்சியார்'. பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்துக்காக தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய பாடலொன்றை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். 'ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து' என்று தொடங்கும் பாடலை ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ’சூப்பர் சிங்கர்’ பிரியங்காவும் பாடியிருக்கிறார்.

இளையராஜா இசையில் பாடியுள்ளதால் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பிரியங்கா இருவருமே பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீடு உள்ளிட்டவற்றை நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x