Published : 16 Nov 2017 09:46 AM
Last Updated : 16 Nov 2017 09:46 AM

நம்பர் - 1 என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை!- இசையமைப்பாளர் இமான் நேர்காணல்

மிழ் திரையுலகில் முக்கியமான இசையமைப்பாளராகியிருக்கிறார் இமான். ‘டிக் டிக் டிக்’, ‘வணங்காமுடி’ உள்ளிட்ட படங்களில் இசை கவனம் செலுத்தி வரும் இசையமைப்பாளர் இமானிடம் உரையாடியதிலிருந்து...

தற்போது அதிக படங்களுக்கு இசையமைக்கிறீர்கள்... இந்த இடத்துக்கு வந்ததைப் பற்றி..?

எண்ணிக்கையைத் தாண்டி, அந்தப் படங்களில் எவ்வளவு தரமான இசையைக் கொடுத்திருக்கிறோம் என்பதே முக்கியம். இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஏற்றாற்போன்று சரியான நேரத்துக்குப் பாடல்களைக் கொடுத்துவிடுவேன். யாரையும் காக்க வைப்பது எனக்குப் பிடிக்காது. ஒரு படத்தை இவ்வளவு காலத் தில் முடிக்க வேண்டும் என்கிற திட்டமிடுதலோடுதான் எல்லாப் படங்களுமே தயாரிக்கப்படுகின்றன. அதை புரிந்துகொண்டு என் முழுஒத்துழைப்பையும் கொடுக்கவே நினைப்பேன்.

அதிக படங்கள் என்னைத் தேடி வர இதுவும் ஒரு காரணம். இந்தத் துறையில் நம்பர்-1, நம்பர்-2 என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.

சுசீந்திரன் இயக்கத்தில் நாயக னாக நடிப்பதற்குத்தான் உடல் இளைத்துள்ளீர்களாமே..?

நாயகனாக வேண்டும் என்று உடல் எடையை குறைக்கவில்லை. ஆரோக்கியத்துக்காகவே எடையைக் குறைத்திருக்கிறேன். 6 மாதங்களுக்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு இரண்டும் விளிம்பு நிலையில் இருந்தது தெரிந்தது. உடனே எடையைக் குறைக்க ஆரம்பித்தேன்.

சில நாட்களுக்கு முன்பு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது, எல்லாமே சரியான நிலைக்கு வந்துவிட்டது. முழுக் கவும் உணவின் மூலமாக மட்டுமே உடல் எடையை 117 கிலோவில் இருந்து 82 கிலோவுக்குக் கொண்டு வந்தேன்.

நீங்கள் இசையமைக்கும் படங்களில் தொடர்ச்சியாக ஸ்ரேயா கோஷலைப் பாட வைப்பதில் உள்ள மேஜிக் பற்றி....

ஒரு பாடலை பாட கொடுத்தால், அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் அருமையான பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல். தென்னிந்திய இசையில் அவருக்கு பெரிய ஆர்வம். என் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் எல்லாமே மனதை வருடுபவை. அவருக்கு ஒரு வார்த்தைக் கூட தமிழில் தெரியாது. ஆனால், அப்பாடல் வரிகளை உள்வாங்கி, அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் பாடுவார்.

தொடர்ந்து புதுப் புது பாடகர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். அவர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

சமூகவலைதளம் அதற்குப் பெரிய உதவியாக இருக்கிறது. எனது ஜி-மெயில் முகவரிக்கு நிறைய வாய்ஸ் கிளிப்ஸ் வரும். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என நிறைய வாய்ஸ் கிளிப்ஸ் வரும். இதன் மூலமாக வெளிநாட்டில் இருக்கும் திறமையாளர்களைக் கூட அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இங்கிருப்பவர்களை தனி யார் தொலைக்காட்சி நிகழ்ச்சி கள் அல்லது யூ-டியூப் லிங்க் ஆகியவற்றின் மூலம் பிடித்து விடலாம்.

தற்போது பிரபலமான பாட லின் கவர் வெர்ஷன் வருகிறது. அதன் மூலமாகவும் நல்ல குரல்வளம் உள்ளவர்களை அடையாளம் காண முடிகிறது. நிறைய திறமைசாலிகளை திரையுலகுக்குக் கொண்டுவர விரும்பு கிறேன்.

இசையமைப்பாளராக இருக்கும் பலர்... தயாரிப்பாளர், நடிப்பு, இயக்கம் என பணிபுரிந்து வருகிறார்கள். உங்களுடைய அடுத்த திட்டம் என்ன?

அடுத்த கட்டமாக Legendary இடத்தை நோக்கி நகர வேண் டும் என்று நினைக்கிறேன். 40 ஆண்டுகள் கழித்து என்னை இந்தத் துறையில் எப்படி பார்ப்பார்கள் என்பதுதான் மிக முக்கியம். இரவு 10 மணிக்கு மேல் கேட்கக் கூடிய பாடல்களுக்கான கோர்ப்பை இப்போதே சேமித்து வைக்கிறோமா என்பதுதான் கேள்வி. இசைஞானி இளையராஜா சார் பாடல்கள் இப்போது கேட்டாலும் அவ்வளவு இனிமையாக இருக்கிறது. சுமார் 60 ஆண்டுகள் கழித்தும் இப்பாடல்கள் இருக்கும். அதை போல நாம் என்ன சேர்த்து வைத்தோம் என்கிற விஷயம் இருக்கிறதல்லவா?

அதற்கான வேலையைத்தான் தற்போது பார்த்து வருகிறேன். திரும்பிப் பார்க்கிற போது என் பெயரை சொல்லும் இசைக் கோப்புகள் என்ன இருக்கிறது என்பது முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x