Published : 30 Oct 2017 09:08 PM
Last Updated : 30 Oct 2017 09:08 PM

ஜனனியைக் கரம் பிடித்தார் காளி வெங்கட்

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வரும் காளி வெங்கட் திருமணம் சென்னையில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்றது.

'தெகிடி', 'முண்டாசுப்பட்டி' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் காளி வெங்கட். சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்தில் இவருடைய நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அக்கதைக்கு முக்கியத்துவமாகவும் இவருடைய கதாபாத்திரம் அமைத்திருந்தது.

இன்று (அக்டோபர் 30) காளி வெங்கட்டிற்கும், ஜனனிக்கும் சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும், அவருக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

'முண்டாசுப்படி' இயக்குநர் ராம்குமார் இத்திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பர் நண்பர் நடிகர் காளிவெங்கட் ஜனனி திருமணம் எளிமையாக சிறப்பாக நடைபெற்றது வாழ்த்துகள் காளி" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x