Last Updated : 09 Oct, 2017 12:53 PM

 

Published : 09 Oct 2017 12:53 PM
Last Updated : 09 Oct 2017 12:53 PM

தாத்தாக்கள் நாயகராகலாம்.. திருமணமான பெண்கள் நாயகியாகக் கூடாதா?: கஸ்தூரி கேள்வி

நாக சைதன்யா - சமந்தா திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா தெரிவித்தார்.

இதைக் குறிப்பிட்டு கஸ்தூரி, "திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு "உங்க கூட நடித்த ரஜினியும் கமலும் இன்னும் நாயகனாக நடிக்கிறார்கள். உங்களால் முடியல. அந்த காரணம் தான்" என்று ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர் பதிலளித்தார்.

இதற்கு கஸ்தூரி, "ஆனால் ஏன்? அதுதான் என் கேள்வி. தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் (நாயகிகளாக) ஒப்புக்கொள்வதில்லை? ஏன்? ஏன்? ஏன்?" என்று பதிலளித்து இருக்கிறார்.

இப்பதிலுக்கு பலரும் கேள்வி எழுப்பவே, அதற்கு "மனைவியின் காதல், கணவரின் தொழில் வாழ்வை பாதிக்குமா? ஏற்றத்தாழ்வுகளைக் காண முடிகிறதா? எதுவோ தவறாக உள்ளது. உண்மையில், பெண்கள் அவர்களின் கணவர்களின்மேல் அவ்வளவு பிரியமாக இல்லை என்று நினைக்கிறேன். பல பெண்களுக்கு வேறு வழியில்லை என்று கருதுகிறேன்.  ஒரு மகளாகவோ, மனைவியாகவோ பெண்கள் சுதந்திரமாக இல்லை'' என்று பதிலளித்துள்ளார் கஸ்தூரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x