Last Updated : 14 Sep, 2017 01:14 PM

 

Published : 14 Sep 2017 01:14 PM
Last Updated : 14 Sep 2017 01:14 PM

மாணவி ரங்கீலாவின் படிப்பு சர்ச்சை: அரியலூர் விஜய் நற்பணி மன்றத்தினர் விளக்கம்

மாணவி ரங்கீலாவின் படிப்பு சர்ச்சை தொடர்பாக அரியலூர் விஜய் நற்பணி மன்றத்தினர் விளக்கம் அளித்துள்ளார்கள்.

விஜய் நற்பணி மன்றத்தின் வாக்குறுதியால் ரங்கீலா என்ற மாணவி படிப்பைத் தொடர முடியாமல்  ஆடு மேய்த்து வருவதாக செய்திகள் வெளியானது. இதனால் சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.

இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட விஜய் நற்பணி மன்றத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி செல்வி. ரங்கீலா என்பவர் தனது மேற்படிப்பை கன்னியாகுமரியில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பியதன் பேரில் எங்கள் நற்பணி அமைப்பின் நீக்கப்பட்ட நிர்வாகியான ஜோஸ்பிரபுவை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் நிதியுதவி அளிப்பதாக அவர் அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், அவர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் எனக்கோ இயக்க உள்ளூர் நிர்வாகிகளுக்கோ தெரியாது. இப்படி இருக்கையில் எங்கள் கவனத்திற்கு வராத இச்சம்பவத்தை ஏதோ நாங்கள் தான் அம்மாணவிக்கு கல்விக்கான நிதியுதவி வழங்குவதாக வாக்கு கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டதாக பொய்யான தகவல்களை பத்திரிகையாளர்கள் மத்தியில் பரப்பி வருவதாக தெரிகிறது.

மாணவ சமுதாயத்தின் மீது விஜய் அவர்களும் அவர் தம் இயக்கத் தோழர்களும் எந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நாடு நன்கு அறியும்.

இந்நிலையில் இயக்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்ட நீக்கப்பட்ட நிர்வாகியான ஜோஸ்பிரபு அளித்த வாக்குறுதியை கருத்தில் கொண்டும், அம்மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அவரது கல்வி தொடர போர் வீரர்களான இயக்கத் தோழர்கள் உறுதியளித்து நிதியுதவி வழங்க தயாராக உள்ளோம்.

அந்நிதியுதவியை பெற்று அம்மாணவி தனது கல்வியைத் தொடர இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அம்மாணவியின் படிப்புச் செலவுக்கான 1.5 லட்சத்தை கல்லூரியில் செலுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x