Last Updated : 24 Aug, 2017 02:45 PM

 

Published : 24 Aug 2017 02:45 PM
Last Updated : 24 Aug 2017 02:45 PM

அறிவழகன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்: உறுதியானது புதிய கூட்டணி

'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து அறிவழகன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'குற்றம் 23' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன். கதை எழுதி முடித்தவுடன், நாயகன் இறுதி செய்யப்படவுள்ளதாக அறிவழகனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

தற்போது இக்கதையில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தினை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க முன்வந்துள்ளார். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். தற்போது திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

அறிவழகன் படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக 'அடங்காதே', 'ஐங்கரன்', '100% காதல்' உள்ளிட்ட அனைத்து படங்களின் படப்பிடிப்பையும் முடிக்க ஜி.வி.பிரகாஷ் திட்டமிட்டு இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x