Last Updated : 26 Jul, 2017 05:41 PM

 

Published : 26 Jul 2017 05:41 PM
Last Updated : 26 Jul 2017 05:41 PM

வைகோவைப் பற்றி ட்வீட் செய்தது நானல்ல: ரோபோ ஷங்கர் விளக்கம்

ட்விட்டர் தளத்தில் வைகோவைப் பற்றி ட்வீட் செய்தது நானல்ல என்று ரோபோ ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ரோபோ ஷங்கர் என்று பெயரிடப்பட்ட ட்விட்டர் பக்கத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கேலி செய்யும் தொனியில் ட்வீட்கள் வெளியானது. இதனை வெளியிட்டது ரோபோ ஷங்கர்தான் என்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வசைபாடத் தொடங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து ரோபோ ஷங்கர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நேற்றைக்கும், இன்றைக்கும் வைகோவைப் பற்றி நான் ட்வீட் செய்தது போல செய்திகள் வந்துள்ளன. அது என்னுடைய ஐடி அல்ல. அது போலியானது. இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல, பல்வேறு விஷயங்கள் அந்த போலியான ஐடி-யிலிருந்து வந்துள்ளது.

யாரோ செய்த தவறுக்கு, நான் உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் அப்படிப்பட்ட ஆளில்லை. நான் உண்டு என் வேலையுண்டு என இருப்பேன். அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என நினைப்பேன். யார் மனதையும் புண்படுத்த நினைக்கும் ஆள் நானல்ல.

இந்த ட்வீட் சர்ச்சையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். ஏகப்பட்ட பேர் தொலைபேசியில் அழைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

எனது ட்விட்டர் முகவரி @IamRoboShankar. ஆனால், வைகோ பற்றிய ட்வீட் வந்த ட்விட்டர் முகவரி @imroboshankar என்று இருந்திருக்கும். அந்த போலியான ட்விட்டர் முகவரியிலிருந்து வரும் எந்தவொரு ட்வீட், வீடியோ உள்ளிட்ட எதற்குமே நான் பொறுப்பல்ல.

இவ்வாறு ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது ரோபோ ஷங்கர் பெயரில் இயங்கிவந்த போலி ட்விட்டர் பக்கமும், ட்விட்டர் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x