Published : 26 Jul 2017 09:47 AM
Last Updated : 26 Jul 2017 09:47 AM

நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்படுவதாக தி.நகர் வித்யோதயா காலனியைச் சேர்ந்த ரங்கன் மற்றும் அண்ணா மலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த மே மாதம் நடிகர் சங்க கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையராக இளங் கோவன் நியமிக்கப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, நடிகர் சங்கம் எந்த ஆக்கிரமிப்பிலும் ஈடுபடவில்லை எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் அந்த இடத் தில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக தபால் நிலையம் இருந்ததாக மனு தாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக தலைமை தபால் அதிகாரியும். மாநகராட்சியும் பதி லளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாநகராட்சி சார்பில் 1940 மற்றும் 1970 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தி.நகர் அபிபுல்லா சாலையின் வரை படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல தபால்துறை சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. நடிகர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்தர் ஆகியோர் வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘ நடிகர் சங்கம் பொது சாலையை ஆக்கிர மித்துவிட்டதாக கூறப்படும் குற்றச் சாட்டை நிரூபிக்க மனுதாரர்களுக்கு பலமுறை சந்தர்ப்பம் வழங்கியும் அவர்கள் நிரூபிக்கவில்லை. எனவே நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீ்க்கப்படுகிறது’’ என உத்தர விட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

அடுத்த ஆண்டு திறக்கப்படும்:

விஷால் நம்பிக்கை நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திறக்கப்படும் என்று நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது விஷால் கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு மேலும் ஊக்கத்தையும், நம்பிக்கையும் கொடுத் திருக்கிறது. நாளை (இன்று) முதல் கட்டிடத்தை எழுப்புவதற்கான வேலையில் இறங்க வுள்ளோம். நடிகர் சங்கம் எந்த விதத் தில் தப்பு செய்யும், ஊழல் செய்யும் என்று நினைப்பவர்கள் தேவையில் லாமல் நேரத்தை செலவழிக்க வேண் டாம். நாங்கள் திறந்த புத்தகம் மாதிரி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டும் பணியை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முடிக்கும் முனைப் போடு செயல்பட உள்ளோம். நேர்மையாக செயல்பட்டால் எதிலும் வெற்றி காண முடியும் என்பதற்கான பலனாகத்தான் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பார்க்கிறோம். எங்களுக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இவ்வாறு விஷால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x