Published : 16 Jun 2014 05:49 PM
Last Updated : 16 Jun 2014 05:49 PM

7 வில்லன்களோடு மோதும் ஆர்யா

மகிழ் திருமேனி இயக்கி வரும் 'மீகாமன்' படத்தில் நாயகன் ஆர்யாவோடு 7 வில்லன்கள் நடித்து இருக்கிறார்கள்.

ஆர்யா, ஹன்சிகா நடிப்பில் 'மீகாமன்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் மகிழ் திருமேனி. 'தடையறத் தாக்க’ படத்தினைத் தொடர்ந்து இவர் இயக்கும் படம் இது. தமன் இசையமைக்கும் இப்படத்தினை ஜபக் தயாரித்து வருகிறார்.

சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்றது. இதுவரை 70% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. இப்படத்தில் மொத்தமே 2 பாடல்கள் தானாம்.

அதுமட்டுமன்றி முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த த்ரில்லர் வகை படம் என்பதால் 2 பாடல்களே போதும் என தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் ஆர்யாவோடு 7 வில்லன்கள் மோதி இருக்கிறார்கள். இதுவரை ஆர்யா நடித்த படங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தயாராகி வரும் படம் 'மீகாமன் ' என கூறப்படுகிறது.

அதிரடி ஆர்யாவை ரசிகர்கள் கண்முன் நிறுத்த பரபரப்பாக பணியாற்றி வருகிறார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x