Last Updated : 26 May, 2014 03:36 PM

 

Published : 26 May 2014 03:36 PM
Last Updated : 26 May 2014 03:36 PM

விஜய் பிறந்த நாளன்று கத்தி பர்ஸ்ட் லுக்

ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளன்று, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிப்பு

'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன் சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் மற்றும் ஐங்கரன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இதுவரை சுமார் 60% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் தளத்தில், "விஜய்யின் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என கூறியிருக்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x