Last Updated : 19 Sep, 2015 11:43 AM

 

Published : 19 Sep 2015 11:43 AM
Last Updated : 19 Sep 2015 11:43 AM

யு-டியூப் தளத்தில் சாதனை படைத்த புலி ட்ரெய்லர்

யு-டியூப் தளத்தில் அதிகம் பேர் விருப்பம் தெரிவித்த முதல் இந்திய படத்தின் ட்ரெய்லர் என்ற சாதனையை 'புலி' ட்ரெய்லர் பெற்றிருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடித்து, சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். அக்டோபர் 1ம் தேதி வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வரும் சமயத்தில் 'புலி' படத்தின் ட்ரெய்லர் யு-டியூப் தளத்தில் சாதனை படைத்திருக்கிறது.

இந்திய அளவில் வெளியான படங்களின் ட்ரெய்லர்களில், அதிகம் பேர் விருப்பம் தெரிவித்த ட்ரெய்லர் என்ற சாதனையை 'புலி' படத்தின் ட்ரெய்லர் பெற்றிருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் #PuliMostLikedIndianTrailer என்ற ட்ரெண்டில் தங்களது மகிழ்ச்சியை ட்விட்டர் தளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x