Last Updated : 24 Nov, 2015 12:21 PM

 

Published : 24 Nov 2015 12:21 PM
Last Updated : 24 Nov 2015 12:21 PM

பொங்கலுக்கு வெளியாகிறது தாரை தப்பட்டை

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி நடித்திருக்கும் 'தாரை தப்பட்டை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடும் போட்டிக்கும் இடையே இப்படத்தின் உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஐங்கரன் நிறுவனம் தற்போது அறிவித்திருக்கிறது. விரைவில் இசை வெளியீடு உள்ளிட்ட பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது பொங்கலுக்கு 'கதகளி', 'அரண்மனை 2' ஆகிய படங்களோடு 'தாரை தப்பட்டை' படமும் தங்களது வெளியீட்டை உறுதிசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x