Last Updated : 30 Jun, 2016 02:46 PM

 

Published : 30 Jun 2016 02:46 PM
Last Updated : 30 Jun 2016 02:46 PM

புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படம் தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜூலை 22ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜூலை 15ம் தேதியில் இருந்து ஜூலை 22ம் தேதி 'கபாலி' வெளியீடு மாறியிருந்த தகவல் வெளியானது.

அந்த தகவலை குறிப்பிட்டு, "புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இப்படத்தின் டிக்கெட்டுகளை பொது சேவையை பயன்படுத்தும் மக்களுக்கு பரிசாக வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். இதற்கு பலன் கிட்டியுள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

இதற்கு ஒரு சிலர் பதில் ட்வீட்டில் விமர்சனங்களை முன்வைத்தனர்.

அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியை புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க வேண்டும். ரஜினிகாந்தை தூய்மை இந்தியா பிரச்சாரத்துகாகவும் திறந்தவெளியை கழிப்படமாக பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு தூதராகவும் நியமித்தால் மக்களின் பழைய பழக்கங்களை மாற்றி புதுச்சேரியை முன்னேற்றலாம்" என்று பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறார் கிரண்பேடி.

புதுவை துணைநிலை ஆளுநரின் இந்த அறிவிப்பு, ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ள செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x