Published : 23 Sep 2016 03:29 PM
Last Updated : 23 Sep 2016 03:29 PM

பகிர்வுக் களம்: எஸ்.ஜானகியும் நாமும்!

முன்னணி திரைப்பட பாடகர்களில் ஒருவரான எஸ்.ஜானகி, இசைத்துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 1957-ல் 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில் 'பெண் என் ஆசை பாழானது' என்ற பாடலின் மூலம் இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடந்த 60 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 17 மொழிகளில் 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

4 முறை தேசிய விருதையும், 32 முறை மாநில விருதுகளையும் வென்ற இவருக்கு 2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷண் விருதை அறிவித்தது. ஆனால், தனக்கு இந்த விருது தாமதமாக அறிவிக்கப்பட்டதாகக் கூறி அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட எஸ்.ஜானகி, "எனக்கு இப்போது 78 வயதாகிவிட்டது, இன்னும் நானே பாடிக் கொண்டு இருந்தால் எப்படி? மற்றவர்களும் பாடட்டுமே. நான் புதிதாகப் பாடவில்லை என்றாலும் என்னுடைய ரசிகர்கள் எனது பாடலைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

இவ்வேளையில், நமக்குள் நீங்காத சில நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம்.

* எஸ்.ஜானகி என்றவுடன் உங்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் பாடல் எது? ஏன்?

* எஸ்.ஜானகி பாடியதில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது? ஏன்?

* உங்கள் வாழ்க்கை அனுபவத்துடன் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திய அவரது பாடல் எது? அதன் நெகிழ்ச்சியான பின்னணி என்ன?

வாருங்கள்... பகிர்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x