Published : 10 Jul 2017 08:54 AM
Last Updated : 10 Jul 2017 08:54 AM

நன்னிலம் அருகே நல்லமாங்குடியில் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் சிலை திறப்பு

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பால சந்தரின் மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா, அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்துள்ள நல்லமாங்குடியில் நேற்று நடைபெற்றது.

பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் சிலையை திறந்து வைத்தார். விழாவில், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் பிரமிட் நட்ராஜன், இயக்குநர் வசந்த்சாய் ஆகியோர் பாலசந்தர் குறித்து புகழுரையாற்றினர். பாலசந்தர் குடும்பத்தைச் சேர்ந்த புஷ்பா கந்தசாமி, கீதா கைலாசம், பிரசன்னா, பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவை கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், ஜெ.பி.ரெங்கநாதன், சதீஷ், இரா.செழியன், எஸ்.ஆசிப்அலி, சுப்பிரமணிய ஷர்மா, தர்ம.சரவணன், பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒருங்கிணைத்து நடத்தினர். கமலக்கண்ணன் வரவேற்றார். ராஜம் பாலசந்தர் ஏற்புரையாற்றினார்.

நல்லமாங்குடியிலிருந்து பாலசந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் வசித்த வீட்டையும் விற்றுவிட்டனர். அந்த வீடு இருந்த இடத்தில் தற்போது தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பாலசந்தரின் 87-வது பிறந்த தினத்தையொட்டி, அந்த பள்ளி வளாகத்தில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x