Last Updated : 30 Jan, 2014 12:34 PM

 

Published : 30 Jan 2014 12:34 PM
Last Updated : 30 Jan 2014 12:34 PM

தாவூத் படத்திற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு

இந்தி வெளியான 'டி-டே' என்ற படத்தினை தமிழில் 'தாவூத்' என்ற பெயரில் டப்பிங் செய்வதற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ராம்பால், ஸ்ருதிஹாசன், இர்பான் கான், ரிஷி கபூர் உள்ளிட்ட பலர் நடிக்க நிகில் அத்வானி இயக்கிய படம் 'டி-டே'. ஜுலை 19, 2013ல் வெளியாகி வரவேற்பை பெற்றது. சிறந்த சண்டைக்காட்சிகளுக்கான பிலிம் ஃபேர் விருது இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.

இப்படத்தினை தமிழில் 'தாவூத்' என்ற பெயரில் டப்பிங் செய்திருக்கிறார்கள். இதற்கு நடிகை ஸ்ருதிஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ஸ்ருதிஹாசன், " என்னுடைய அனுமதியின்றி நான் நடித்த 'டி-டே' என்ற படத்தினைத் தமிழில் டப்பிங் செய்து 'தாவூத்' என்ற பெயரில் வெளியிட இருக்கிறார்கள். படத்தில் நடிக்க போட்ட பத்திரத்தில் இதற்கான ஒப்பந்தமில்லை. இதனை சட்டப்படி சந்திப்பேன். " என்று கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x