Last Updated : 21 Oct, 2016 06:29 PM

 

Published : 21 Oct 2016 06:29 PM
Last Updated : 21 Oct 2016 06:29 PM

தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது டோன்ட் ப்ரீத்

'டோன்ட் ப்ரீத்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காக இருப்பதை அப்படத்தின் இயக்குநர் ஃபீடி அல்வாரேஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார்

ஸ்டீவன் லாங், ஜேன் லீவி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஃபீடி அல்வாரேஸ் கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்த படம் 'டோன்ட் ப்ரீத்'. தமிழ்நாட்டில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் படங்களுக்கு நிகரான வசூலை ஈட்டியது.

இப்படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது என்றும், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், பேச்சுவார்த்தை நிலையிலேயே இருப்பதால் யாருமே இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், இப்படம் தமிழில் ரீமேக் ஆக இருப்பது குறித்து 'டோன்ட் ப்ரீத்' இயக்குநரிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு "உண்மைதான். மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவிருக்கிறது. தற்போது ரீமேக் உரிமைக்கான விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x