Last Updated : 13 Jun, 2014 02:26 PM

 

Published : 13 Jun 2014 02:26 PM
Last Updated : 13 Jun 2014 02:26 PM

தனி ஒருவனாக களமிறங்கும் ஜெயம் ரவி

அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து வரும் படத்திற்கு 'தனி ஒருவன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

ஜெயம் ரவி, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தினை ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி மசூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. பெயரிடப்படாமல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பிற்கு தற்போது 'தனி ஒருவன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதுவரை ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஜெயம் ராஜா முதன் முறையாக நேரடி கதை ஒன்றிணை 'தனி ஒருவன்' படமாக இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x