Last Updated : 13 Jan, 2014 12:00 AM

 

Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

சின்னத்திரையில் ஒரு சூப்பர் பொங்கல்

குளிரும் மார்கழிக்கு விடைகொடுத்து தைத்திருநாளை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். வாயிற்தோரணம், பழையன கழிதல், புத்தரிசி, புத்தாடை, ஜல்லிக்கட்டு என்று பொங்கல் கொண்டாட்ட வேலைகள் தடபுடலாக அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில் இன்னுமொரு பொழுதுபோக்கு அம்சம் சின்னத்திரை பொங்கல் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள். கலகலப்பான நிகழ்ச்சிகளை வழங்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒன்றுசேர்ந்து பொங்கலை கொண்டாடினால் எத்தனை உற்சாகமாக இருக்கும். அந்த உற்சாகத்தை நமக்கு அளிப்பதற்காக ஒரே இடத்தில் பொங்கல் கொண்டாடினார்கள் விஜய் டிவி நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரப் பொங்கலில் இருந்து சில பகுதிகள்:

சிலம்பம், உறி அடித்தல், கரும்பு உடைத்தல் என்று பாரம்பரிய விஷயங்களோடு விஜய் டிவியின் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின. ‘புதுக்கவிதை’, ‘ஆபீஸ்’, ‘தாயுமானவன்’, ‘சரவணன் மீனாட்சி’, ‘ஜோடி சீசன் 6’, ‘சிரிச்சா போச்சு’ என்று விஜய் டி.வி நிகழ்ச்சிகளின் நட்சத்திர பட்டாளமே களத்தில் ஆஜராகி இருந்தனர். நிகழ்ச்சியில் கோபிநாத், மா.கா.பா இல்லாத குறையை ‘சிரிச்சா போச்சு’ பழனி பட்டாளம், அமுதவானன் இருவரும் மிமிக்ரி செய்து பூர்த்தியாக்கினார்கள். நிகழ்ச்சியின் தொடக்கமாக பழனி பட்டாளம், ‘நீயா நானா’ கோபிநாத் ஸ்டைலில் ‘‘ நாம் பண்பாடு, நாகரிகம் குறையாமல் பொங்கல் திருநாளை எப்படி கொண்டாட வேண்டும் என்றால்???’’ என்று ஆரம்பித்ததும் ‘ஆபீஸ்’ தொடரில் நடிக்கும் புலி, கட்டை இருவரும் பழனியை விரட்ட அரங்கத்திலிருந்து ‘சிரிச்சா போச்சு’ பட்டாளமே எஸ்கேப்.

வெண்பொங்கல் அணி, சர்க்கரைப்பொங்கல் அணி என்று இரண்டு அணிகளாக உறி அடித்தல் போட்டியை நடத்தினார்கள். முதலில் ஆனந்தி, சூசன், மகாலட்சுமி மூவரும் கண்களை கட்டிக்கொண்டு போட்டிக்கு தயாரானார்கள். மகாலட்சுமி மிகவும் குறைவாக 1.20 நிமிடம் எடுத்துக்கொண்டு பானையை உடைத்தார். அதை பொறுத்துக்கொள்ள முடியாத நந்தினி, ‘குயிலி ஆன்ட்டி சொல்லிக் கொடுத்துட்டாங்க’ என்று சண்டைக்கு வர, ‘‘வா ஒரு கை பார்த்துடுவோம் என்று குயிலி சிலம்பத்தை எடுத்துக்கொண்டு தேவர்மகன் ‘சாந்துப்பொட்டு, சந்தனப்பொட்டு..!’’ பாட்டுக்கு சிலம்பத்தை சுழற்றி செம போட்டி ஆட்டத்தை நிகழ்த்தினார்.

நமக்கும் இந்த ஆட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அரை தூக்கத்தில் ஆழ்ந்திருந்த ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி செஃப் தாமுவை கவனித்த ஆனந்தி, “தாமு அங்கிள் பொங்கல்ல உப்பு கம்மியா இருக்கு!’’ என்றார். திடுக்கிட்டு எழுந்தவர், ‘‘அது சர்க்கரைப்பொங்கல், ஆனந்தி!’’ என்று உடனே சுதாரித்துக்கொண்டு செக் வைத்தார்.

கரும்பு உடைக்கும் போட்டியில் கார்த்திக், இர்பான், பாரதி, பாண்டி ஆகியோர் களத்தில் குதித்தனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் படவா கோபி, ‘இந்த நால்வரில் யார் 6 கரும்பு கொண்ட கட்டை உடைக்கிறார்களோ, அவருக்கு பரிசாக சூசன் முத்தம் கொடுப்பார்’ என்று ஜாலியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு பழனி பட்டாளம் எழுந்து, “ அதுக்கு நாங்க சூசைடே செய்துப்போம் ” என்று கிண்டல் அடிக்க அரங்கில் குபீர் சிரிப்பலை. அந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் ‘நீயாநானா’ கோபிநாத் ஸ்டைலில், ‘‘அதாவது இந்த இரு அணியின் பங்களிப்பை பார்க்கும்போது…!’’ கூறி பழனி பட்டாளம் திரும்ப… அரங்கத்தில் இருந்த கேமராமேன்கள் உள்ளிட்ட சின்னத்

திரை நட்சத்திரங்கள் அத்தனை பேரும் எஸ்கேப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x