Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

கைகோர்க்கும் ‘எந்திரன்’ சிஷ்யர்கள்: தயாராகும் டமால் டுமீல்

தமிழ் சினிமாவில் இது இளையவர்களின் காலம். கதை இருந்தால் போதும் ஒரு படத்தை ஜெயிக்கவைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இளைய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்குள் புயலாக நுழைந்து வருகிறார்கள். அப்படி இளைய தலைமுறைக் கலைஞர்களால் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டு வரும் படங்களில் ஒன்று ‘டமால் டுமீல்’. ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிய சீனியர் கலைஞர்களின் உதவியாளர்களால் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இயக்குநர் யை ‘தி இந்து’வுக் காக சந்தித்தோம். இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இவர், தன் படத்தின் தலைப்பைப் போலவே துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் தெறிக்கும் வேகத்தில் பேசத் தொடங்கினார்.

‘டமால் டூமில்’ என்று படத்தின் தலைப்பே புதிதாக இருக்கிறதே?

இது சீரியஸ் காமெடி த்ரில்லர். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் மணிகண்டன் (வைபவ்) மூட நம்பிக்கைகளை உடையவன். நியூமராலஜி மாதிரி எல்லா விஷயங்களையும் பார்ப்பான். பணியில் இருக்கும்போது ஒரு பிரச்சினையில் வேலை போய்விடும். வேலை போன நேரத்தில் பணத்துக்காக ஒரு சின்ன கிரைமில் இளவரசு (கோட்டா சீனிவாசராவ்), காமாட்சி சுந்தரம் (ஷயாஜி ஷிண்டே) ஆகியோரிடம் மாட்டிக்கொள்வான். இந்த ரெண்டு கேரக்டர்களுக்கு நடுவில் இருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதுதான் கதை. படத்தில் எல்லாமே ரொம்ப சீரியஸாப் போகும். ஆடியன்ஸா பாக்குறப்போ அது காமெடியா இருந்துகிட்டு இருக்கும்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மாதிரியா?

அப்படிச் சொல்ல முடியாது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படமே PURE BASED காமெடி தான். ஆனா, என்னோட படம் த்ரில்லர் வகை. நிறைய கொலைகள் இருக்கும். த்ரில்லர் பாயின்ட்ல ஒரு கமர்ஷியல் இருக்கும். நிறைய புல்லட் சத்தம் இருக்கும் என்பது படத்தலைப்பிலேயே தெரிந்திருக்குமே.

சின்ன வேடங்களில் நடித்து வந்த வைபவ்வை முழுநீள நாயகனாக ஆக்கிட்டீங்க போல..

முதல்ல கதையை முடிவுப் பண்ணி எழுதிட் டேன். எழுதினதுக்கு பிறகு பார்த்தோம்ன்னா பெரிய நடிகரை அப்ரோச் பண்ண முடியாது. ஏன்னு படம் பார்த்த உடனே தெரிஞ்சுக்குவீங்க. ஒரு அளவிற்கு படம் பார்க்குறவங்களுக்கு தெரிஞ்ச முகமாக இருக்கணும்னு, முடிவு பண்ணினேன். எனக்கு 'கோவா', 'மங்காத்தா' படங்கள்ல வைபவோட நடிப்பு பிடிச்சிருந்தது. தயாரிப்பாளர்கிட்ட சொல்லும் போதே, வைபவோட நடிப்பு எனக்கு பிடிச்சு இருந்தது. எனக்கு அவர் மட்டும் இருந்தா போதும். வேறு யாரும் வேண்டாம். நான் இந்தக் கதையைப் பண்ணிடுறேன்னு சொன்னேன்.

படத்தோட முழுக்கதை, தொழில்நுட்ப கலைஞர்கள் லிஸ்ட், படத்தோட பட்ஜெட் என்ன என்பதை முதல்லயே எழுதிக் கொடுத்திட்டீங்களாமே?

ரெண்டு வருஷமா சினிமால முயற்சி பண்ணிட்டு இருக்கோம். ‘நண்பன்’ படம் முடிஞ்ச உடனே ஷங்கர் சார்கிட்ட இருந்து வெளியே வந்தேன். இந்த படத்தோட கதையை சொல்ல முடியாது. மற்ற இயக்குநர்கள் மாதிரி வேற சினிமாக்கள் எடுக்கத்தான் ஆசைப்பட்டேன். அதுக்குத்தான் தயாரானேன். ஆனா, நிறைய இடங்களுக்கு போகும் போது எனக்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. உடனேதான் இந்தக் கதையை தயார் பண்ணினேன். எல்லாம் சீன்களையும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கும். சீனுக்கு சீன் படத்தோட கேரக்டர்களும் மாறிக்கிட்டே இருக்கும். தயாரிப்பாளர்கிட்டே சொல்லும் போதே, இதை நீங்க படமா பாத்தாத்தான் புரியும். கதையா சொல்ல முடியாது. இந்த முழுக்கதையையும் படிச்சுப் பாருங்க புரியும்னு கொடுத்தேன். ஏன்னா, நான் எழுதும் போது இது டிராக் ஷாட், இது ஜிம்மி ஷாட் அப்படினு ஃபுல்லாவே எப்படி எடுக்கப் போறோம்னு எழுதிட்டேன்.

அதுமட்டுமல்லாம, கதையைக் கொடுக்கும் போதே டெக்னிஷியன் லிஸ்ட், பட்ஜெட், 43 நாள் ஷுட்டிங் இப்படி எல்லாமே கொடுத்துட்டேன். 41 நாள்ல முடிச்சுட்டேன்.

‘எந்திரன்’ படத்துல பணியாற்றியவங் களை எப்படி இணைச்சீங்க?

முதல்ல ‘எந்திரன்’ல பணியாற்றிக் கொண் டிருக்கும் போது எல்லாருமே நண்பர்கள். எட்வின் என்னோடு ‘எந்திரன்’ மேக்கிங்ல பணியாற்றினார். ராஜீவ் மேனனோட பிலிம் இன்ஸ்ட்டியூட்ல கோல்ட் மெடல் வாங்கியவர். சாபுசிரில் கிட்ட பணியாற்றியவர் ஆறுச்சாமி இந்த படத்தோட கலை. முரளிஜி, பீட்டர் மாஸ்டரோட உதவியாளர். பரமேஷ் கிருஷ்ணா, எடிட்டர் ஆண்டனி கிட்ட பணியாற்றியவர். இப்படி எல்லாருமே ‘எந்திரன்’ல ஒரு குரூப்பா ஆகிட்டோம். இதனால இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு ரொம்ப ஈஸியாப் போச்சு. எல்லாருமே ஜாம்பவான்கள்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டு இப்போ படம் பண்ணியிருக்கோம். கண்டிப்பா ஜெயிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x