Published : 16 Apr 2016 04:10 PM
Last Updated : 16 Apr 2016 04:10 PM

ஏப்.22-ல் சசிகுமாரின் வெற்றிவேல் வெளியீடு

வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' படத்திற்கு சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி வெளியாகிறது.

'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டபோது சசிகுமார் நடிப்பில் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 'வெற்றிவேல்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் மியா ஜார்ஜ், பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் வசந்தமணி இயக்கி இருக்கிறார். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்திருக்கிறார்கள். 'வெற்றிவேல்' படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்தவுடன், படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காட்டினார்கள். 'யு' சான்றிதழ் வழங்கியது சென்சார் குழு. அதனைத் தொடர்ந்து படத்தை ஏப்ரல் 29ம் தேதி வெளியிட படக்குழு தீர்மானித்தது.

ஆனால் தற்போது ஒரு வாரம் முன்பாகவே ஏப்ரல் 22ம் தேதி 'வெற்றிவேல்' வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

இப்படம் 'சுந்தரபாண்டியன்' பாணியிலான அனைத்து தரப்பினரையும் கவரும் கதை என்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x