Published : 12 Sep 2015 02:40 PM
Last Updated : 12 Sep 2015 02:40 PM

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்பு ஃபத்வா அறிவிப்பு

இரானிய திரைப்படமான 'முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்' படத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஃபத்வா வித்துத்துள்ளது. அந்தப் படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கும் அந்த அமைப்பு ஃபத்வா விதித்துள்ளது.

இது குறித்து பேசிய, ஃபத்வா விதித்த ராஸா அமைப்பின் தலைவர் சயீத் நூரி, "இந்த தலைப்பையே நாங்கள் எதிர்க்கிறோம். படம் பிடிக்கவில்லயென்றால் மக்கள் இந்த தலைப்பை கிண்டல் செய்யலாம். அது நபிகளுக்கு அவமதிப்பாகும். படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் சம்பளம் வாங்கியுள்ளனர். அவர்களது நிஜமான நடத்தை எப்படியிருக்கும் என்று நமக்கு தெரியாது. இதெல்லாம் நடக்க இஸ்லாமியர்களான நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்” என்றார்.

படத்தில் வேலை செய்த பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள் தானே என்ற கேள்விக்கு பதிலளித்த சயீத், "அவமதிப்பு எப்படிப் பார்த்தாலும் அவமதிப்பே. அவமதித்தவரின் மதம் முக்கியமல்ல" என்றார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசவுள்ள சயீத், இந்தப் படத்தை தடை செய்யவேண்டும் எனவும் அவரிடம் கோரிக்கை வைக்கவுள்ளார். மேலும், இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் மீது வழக்கு தொடரவும் கோரவுள்ளார்.

இஸ்லாமியர்கள் இந்த படத்தை எதிர்த்து, சட்டத்துக்கு உட்பட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்றும், வெளிப்படையாக படத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த ஃபத்வாவில் குறிப்பிடப்பட்டுள்லது.

இரானின் புகழ்பெற்ற இயக்குநரான மஜித் மஜிதி 'சில்ரன் ஆஃப் ஹெவன்', 'தி கலர் ஆஃப் பாரடைஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது காஷ்மீர் குறித்த ஒரு படத்தின் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x