Last Updated : 02 Jan, 2017 03:02 PM

 

Published : 02 Jan 2017 03:02 PM
Last Updated : 02 Jan 2017 03:02 PM

அறுந்த ரீலு 29: சந்திரமுகி வேட்டையனின் லகலகலகலக சுவாரஸ்ய பின்னணி

'சந்திரமுகி' படத்தில் சுட்டிக்காட்ட பலநூறு விஷயங்கள் இருந்தாலும் பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது வேட்டையன் கதாபாத்திரத்தின் 'லகலகலகலக'. வேட்டையன் கதாபாத்திரத்தின் தன்மையை எப்படி ரஜினி மற்றும் இயக்குநர் பி.வாசு இருவரும் வடிவமைத்தனர் என்ற விவரம்!

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வெளியிட்டது.

இப்படத்தில் வேட்டையன் என்ற மன்னன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினி. அதில் அவருடைய உடல் தன்மை மற்றும் வசன உச்சரிப்புக்கு கடுமையாக சிரத்தை எடுத்துள்ளார் ரஜினி.

'வீரையன்' கதாபாத்திரத்தை இறுதியாக படப்பிடிப்பு செய்துள்ளார். அதன் படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினி "வேட்டையன் கதாபாத்திரத்தை எப்படி செய்யலாம்" என்று இயக்குநர் பி.வாசுவிடம் அடிக்கடி விசாரித்துள்ளார்.

அக்கதாபாத்திரம் நடந்து வரும் போது கேட்கும் செருப்பு சத்தத்தை மட்டும் சொல்லி, இதே மாதிரி அறிமுகக் காட்சி வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன் என பி.வாசு பதிலளித்துள்ளார். அப்போது வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசும் போது இடையே "இமயமலைக்கு சென்றிருக்கும் போது, ஒருமுறை 'லகலகலகலக' என்ற சத்தம் மட்டும் கேட்டது. அச்சதம் ஒரு ரிஷியினுடையது. அடுத்த நாள் அவரைப் பார்த்தேன். ரிஷிகள் எல்லாம் நம்மைப் பார்க்க மாட்டார்கள். நாம் அவர்களைப் பார்ப்பதே ஒரு பெரிய குடுப்பினை" என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

அப்போது வேட்டையன் கதாபாத்திரத்துக்கு இந்த வசன உச்சரிப்பை வைத்தால் நன்றாக இருக்கும் என்று தன்னுடைய யோசனை தெரிவித்துள்ளார் பி.வாசு. "சரியா இருக்குமா?" என்று கேட்டுவிட்டு சென்றுவிட்டாராம் ரஜினி.

சில நாட்கள் கழித்து "கொஞ்சம் வீட்டுக்கு வரமுடியுமா" என்று கதைவிவாதத்தில் இருந்த பி.வாசு அழைத்துள்ளார் ரஜினி. வீட்டுக்கு பி.வாசு வந்தவுடன், அவரை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை நிற்கவைத்துவிட்டு, 20 அடி தூரம் நடந்திருக்கிறார். பின்பு அப்படியே வேகமாக நடந்துவந்து 'லகலகலகலக' என்று படத்தில் வரும் போலவே நடித்துக்காட்டியுள்ளார்.

உடனே ரஜினியின் கையைப்பிடித்து "உங்களுடைய 'பாட்ஷா' வசன உச்சரிப்புப் பிறகு, இந்த வசனம் பலராலும் பேசப்படும் சார்" என்று தெரிவித்துள்ளார் பி.வாசு. "அப்படியா.. சரியா இருக்கா?. சரி இப்படியே செய்யலாம்" என்று திட்டமிட்டு வேட்டையன் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளது 'சந்திரமுகி' படக்குழு.

முந்தைய பாகம் - >அறுந்த ரீலு 28: மணிரத்னத்துக்காக உருவாகி கெளதம் மேனன் வசமான பாடல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x