Published : 02 Mar 2015 11:38 AM
Last Updated : 02 Mar 2015 11:38 AM

அஜித் - ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகர் அஜித்குமார் - மனைவி ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று காலை 4.30 மணியளவில் குழந்தை பிறந்தது. அஜித் - ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே அனுஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இன்று காலை ஆண் குழந்தை பிறந்த ஒரு சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #குட்டிதல என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக தொடங்கியது.

ட்விட்டரில் டிரெண்டாகி வரும் இந்த ஹேஷ்டேகில் அஜித்-ஷாலினி தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான 'என்னை அறிந்தால்' படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டுக் கொண்டிடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x