Published : 25 Apr 2016 05:33 PM
Last Updated : 25 Apr 2016 05:33 PM

அஜித் ப்ளஸ்? மைனஸ்? - பட்டியலிடத் தயாரா?

மே 1-ம் தேதி அஜித் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நடிப்பதோடு தன் பணி முடிந்துவிட்டது என்று இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என படத்தை விளம்பரபடுத்தும் எந்த ஒரு பணியிலும் அஜித் ஈடுபடுவதில்லை. ஆனால், அவருடைய படங்களோ கோடிகளில் வசூலை அள்ளி வருகிறது. கோடிகளை அள்ள அள்ள அவரும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்திக் கொண்டே வருகிறார்.

சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் என்பது மிகவும் அதிகம். ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்று அவற்றை முழுக்க அஜித் கலைத்துவிட்டாலும், அவருடைய பட வெளியீடு அன்று கட்-அவுட் வைத்து தோரணம் கட்டுகிறார்கள் ரசிகர்கள். திரையில் மட்டுமே தன்னைக் காண முடியும் என்று அஜித் எடுத்திருக்கும் முடிவும் ஒரு காரணம்.

சமீபகாலமாக நடிகர் சங்க விவகாரங்கள், விஷால் சர்ச்சை உள்ளிட்ட பல விஷயங்களில் அஜித்தின் பெயர் அடிபட்டு வருகிறது.

ஒரு ரசிகனின் பார்வையில் நீங்கள் அஜித்திடம் பார்க்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ன என்று பட்டியலிடுங்கள். தகாத வார்த்தைகள் ஏதுமின்றி நீங்கள் பதிவு செய்யும் பதிவுகள் 'இந்து டாக்கீஸ்' இணைப்பிதழில் பிரசுரிக்கப்படும் வாய்ப்பு உண்டு.

அஜித்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ன? பட்டியலிடுங்களேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x