Published : 05 Mar 2015 04:30 PM
Last Updated : 05 Mar 2015 04:30 PM

துவங்குகிறது தெலுங்கு ஜில்லா

நடிகர்கள் விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் தமிழில் வெளியான 'ஜில்லா' திரைப்படம், தெலுங்கில், நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் ரவிதேஜா நடிப்பில் தயாராகவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 'ஜில்லா'வின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேறொரு முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், கதையின் மீது திருப்தி இல்லாததால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தற்போது வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜா ஆகியோர் இக்கதைக்கு ஒப்புக்கொண்டள்ளதால் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தை இயக்குநர் வீரூ போட்லா இயக்கவுள்ளார்.

'ஜில்லா' படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் சரத் மாரார் வைத்துள்ளார். பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோபாலா கோபாலா' திரைப்படம் இவர் தயாரித்ததே. கோபாலா கோபாலா' படம் இந்தியில் வெளியான 'ஓ மை காட்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x