Last Updated : 11 Dec, 2015 11:33 AM

 

Published : 11 Dec 2015 11:33 AM
Last Updated : 11 Dec 2015 11:33 AM

சூழல் ஒன்று பார்வை இரண்டு: தன்னை மறந்து மண்ணில் விழுந்து

இளமை என்னும் பூங்காற்று வீசும் பொழுது காதல் என்னும் மழை கொட்டுவது மனித உணர்வின் இயற்கையான நிகழ்வாக அமைந்துள்ளது. அப்பொழுது ‘சமா’ என்று இந்திக் கவிஞர்கள் அழைக்கும் சுற்றுச்சூழல் அழகாக ஆகிவிடுகிறது. இளமையின் ஆட்சியில் காதல் அரங்கேறும் சூழலை இரு விதமான பார்வைகளில் அணுகும் பாடல்களைப் பார்ப்போம்.

இந்த இரண்டு பாடல்களும் மிகச் சிறந்த இசையமைப்பு, நெஞ்சத்தை அள்ளும் பாடகரின் குரல், வளம் செறிந்த கவி வரிகள் ஆகியவற்றால் மட்டுமின்றி மோசமான பாடல் காட்சியாக்கம் என்ற வகையிலும் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன.

இந்திப் பாடல்:

படம்: கர் கர் கீ கஹானி (ஒவ்வொரு வீட்டின் கதை)

பாடலாசிரியர்: ஹஸ்ட்த் ஜெய்ப்பூரி

பாடியவர்: கிஷோர் குமார்

இசை: கல்யானஜி ஆன்ந்த்ஜி

சமா ஹை சுஹானா சுஹானா

நஷே மே ஜஹான் ஹை

கிஸி கோ கிஸி கீ கபர் ஹீ கஹான் ஹை

ஹர் தில் மே தேக்கோ முஹபத் ஜவான் ஹை

பொருள்:

சுற்றுச்சூழல் உள்ளது சுகமாக

பற்றியுள்ளது (கள்ளின்) மயக்கத்தை

யாருக்கும் மற்றவருடைய நினைவு (இல்லை)

யாருடைய இதயத்தில் காதல் இளமை உள்ளதோ

அங்கே பார்வைகள் பார்வையால் பாடுகின்றன

எவர் உள்ளம் கவர்ந்தாரோ அவர் அறிமுகம் நேர்கிறது

உள்ளத்தின் இந்த அதிசயக் கதையை உற்றுநோக்கி

உரைக்கின்றன விழிகள் நெஞ்சம் ஊமையாயிற்று

உள்ளங்கள் சங்கமித்து அழகாக ஆயின

அவரவர் காதலர் மேல் பைத்தியம் ஆனது

காதலர் வாழும் இடமே காதலும் வாழும்

காதல் எதுவோ காணும் தர்மமும் அதுவே

இப்பாடலைவிட மிக அழுத்தமான பொருள் உடைய கண்ணதாசன் கவி வரிகளும், இந்திப் பட நாயகியாக நடித்த பாரதியைவிட அழகும் கவர்ச்சியும் மிகுந்த தேவியின் தோற்றமும் அதைவிட அழகான நடிப்பும் தமிழ்ப் பாடலை ஒப்பிட இயலாத உயரத்திற்கு இட்டுச் செல்கிறது.

தமிழ்ப் பாடல்:

படம்: பகலில் ஓர் இரவு
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: இளையராஜா


இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம்

அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்…

தன்னை மறந்து மண்ணில் விழுந்து,

இளமை மலரின் மீது,

கண்ணை இழந்த வண்டு,

தேக சுகத்தில் கவனம்,

காட்டு வழியில் பயணம்,

கங்கை நதிக்கு…

மண்ணில் அணையா?

அங்கம் முழுதும் பொங்கும் இளமை,

இதம் பதமாய்த் தோன்ற,

அள்ளி அணைத்த கைகள்

கேட்க நினைத்தாள் மறந்தாள்

கேள்வி எழும் முன் விழுந்தாள்

எந்த உடலோ எந்த உறவோ?

மங்கை இனமும் மன்னன் இனமும்,

குலம் குணமும் என்ன?

தேகம் துடித்தால் கண்ணேது?

கூந்தல் கலைந்த கனியே

கொஞ்சி சுவைத்த கிளியே

இந்த நிலைதான் என்ன விதியோ?

இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு…