விஜய் டி.வி தொகுப்பாளினி டிடிக்கு டும்டும்

டிடி உடன் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்

Published : 30 May 2014 08:25 IST
Updated : 30 May 2014 09:57 IST

விஜய் டிவியின் ‘டெலி அவார்டு’ நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினியாக விருது பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் திவ்யதர்ஷினி (டிடி) ‘‘ரொம்பவே சந்தோஷமான தருணம் இது.மொத்தமாக 29 பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்துள்ளது. நாம ஏதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறோம். அது மக்களுக்கு பிடிப்பதால்தான் இப்படியான விருதுகள் வரைக்கும் செல்ல முடிகிறது.

முதலில் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியின்போது விஜய் டிவி குழுவினர் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து அரட்டை அடித்து கொண்டாடியதை மறக்கவே முடியாது’’ என்கிறார் திவ்யதர்ஷினி. அதேநேரத்தில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக டிடியின் வீட்டில் அவரது திருமணத்தைப் பேசி முடித்துள்ளார்களாம். மாப்பிள்ளையின் பெயர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.

‘‘அவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி யாளராக பணியாற்றியவர். விரைவில் படம் இயக்கப் போகிறார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் இரு வரும் நண்பர்கள். என்னோட வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கின நேரம். அவரோட வீட்டில் அவருக்கு பொண்ணு பார்க்க தொடங்கினாங்க.

ஒரு வழியாக ரெண்டு பேர் வீட்டிலும் உள்ள பெரியவங்களே பேசி எங்கள் திருமணத்தை முடிவு செய்துட்டாங்க. ஜூன் இறுதியில் சென்னையில் திருமணம். இத்தனை நாட்களாக என்னோட நண்பனாக இருந்த ஸ்ரீகாந்தை, ‘ஹாய் மாமா’’ என்றுதான் செல்லமாக கூப்பிடுவேன். அவ்ளோ ஜாலியான, கேரிங்கான நபர். இப்போ என்னோட லைஃப் பாட்னராகவே ஆகிட்டார். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. உங்க எல்லோரோட ஆசீர்வாதமும் எங்க ரெண்டு பேருக்கும் வேண்டும்’’ என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார், டிடி.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor