Published : 19 Sep 2015 08:18 AM
Last Updated : 19 Sep 2015 08:18 AM

திரை விமர்சனம்: மாயா

இரண்டு கதைகள் திரையில் ஓட ஆரம்பிக்கின்றன. ஒரு கதை, மாநகரின் புறத்தே இருக்கும் ‘மாயவனம்’ என்ற காட்டையும் மனநலக் காப்பகம் ஒன்றின் மர்மங்களையும் பற்றி யது. காப்பகத்தில் கர்ப்பவதியாகச் சேர்க்கப்பட்டு இறந்துபோன ஒரு பெண்ணைப் பற்றி ஆராய்ந்து எழுதப்படும் தொடர்கதையின் கதாசிரியர், அதை வெளியிடும் பத்திரிகை முதலாளி, அவரது மனைவி, அதற்குப் படம் வரையும் ஓவியர் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் வழியே பரபரப்பாக நகர்கிறது அந்தக் கதை.

இரண்டாம் கதையில் கண வரைப் பிரிந்து கைக்குழந்தை யுடன் வாழும் அப்சரா (நயன்தாரா) என்ற பெண் பார்வையாளர் களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறார். கணவன் மீதிருக்கும் மனத்தாங்கல் காரணமாகத் தனித் துப் போராடும் அவருக்குக் கடும் பண நெருக்கடி.

இதற்கிடையில் மாயவனம் குறித்து எடுக்கப்பட்ட பேய்ப்படம் ஒன்று வியாபாரம் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. அதை இரவுக் காட்சியில் தனியாளாகப் பார்ப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு என அறிவிக்கிறார் அதன் இயக்குநர். பண நெருக்கடியால் வாடும் அப்சரா அந்தப் படத்தைப் பார்க்க ஒப்புக்கொள்கிறார். அந்தப் படத்தைப் பார்க்கும் போது அவருக்கு ஏற்படும் அமானுஷ்யமான அனுபவங்கள் தாம் மீதிக்கதை.

இரண்டு கதைகளையும் இணைக்கும் புள்ளியை மிகத் திறமையாகவும் படைப்பூக்கத் துடனும் உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் அஸ்வின் சரவ ணன். முதல் பாதியில் எழுப்பப் படும் எல்லாக் கேள்விகளுக்கும் நம்பகமான பதில்களைத் தந்து பேய்ப் படம் பார்க்கும் அனுப வத்தை அற்புதமானதாக ஆக்கி விடுகிறது திரைக்கதை.

கதாபாத்திரங்களையும் அவர்களுக்கு ஏற்படும் நெருக் கடிக்கான காரணங்களையும் மிகையாக நீட்டிமுழக்காமல் சின்னச் சின்ன காட்சிகள் மூலமே பார்வையாளர்களை நம்ப வைத்துவிடுகிறார். உதாரணத் துக்கு ஓவியர் வசந்த் (ஆரி) தனது முன்னாள் காதலை மறக்க முடியாமல் தவிப்பதும், அவரது முன்னாள் காதலி (ரேஷ்மி மேனன்) அவரைச் சமாதானப்படுத்த முயலு வதும், தனக்குத் திருமண வாழ் வில் ஏற்பட்ட சிக்கலை வசந்திடம் சொல்ல முயல்வதுமான காட்சி கள் சிலவே. என்றாலும் அவை முறிந்துபோன காதல் ஒன்றின் வலியையும் கூண்டில் சிக்கிய திருமண வாழ்வொன்றின் தவிப் பையும் நமக்குள் அழுத்தமாகக் கடத்தி விடுகின்றன.

சின்னச் சின்ன கதாபாத்தி ரங்களும் தமக்கான முழுமை யுடன் வந்துபோகின்றன. தலை யற்ற உருவம் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறது என்னும் படிமம் முதலில் வசனமாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் காட்சியாக அது வரும்போது அந்தக் காட்சியின் வலிமையும் திரைக்கதையின் ஒருங் கிணைப்பும் அசரவைக்கின்றன.

இரு வேறு பாதைகளில் பய ணிக்கும் பாத்திரங்களுக்குள் இருக்கும் தொடர்பைத் திரைக் கதை கச்சிதமாக நிறுவுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பிரச் சினையும் மற்றொரு கதாபாத் திரத்துடன் எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதைக் காட்சியமைப்புகளில் ஊடுபா வாகப் பின்னியிருக்கும் விதம் ஆச்சரியப்படுத்துகிறது. இரண் டாம் பாதியில் வரும் சுடுகாட்டுக் காட்சி பார்வையாளர்களை உலுக்கி எடுக்கிறது.

படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. ரூ.5 லட்சத்துக்காக படத்தைப் பார்த்து ஏற்ெகனவே ஒருவர் இறந்துபோன சூழலில் போலீஸின் விசார ணைக்கு உட்பட்ட இயக்குநர், அதை மறந்து உடனடியாக அப்சரா வுக்கு படத்தைக் காட்ட ஒப்புக் கொள்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மாயவனம் பற்றிய இரண்டாம் பாகப் படப்பிடிப்பும் தேவையற்ற திணிப்பாகவே தோன்றுகிறது.

நயன்தாரா தன் பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்தி ருக்கிறார். தோற்றத்தை முன்னி றுத்தும் வேடங்களில் பிர காசிக்கும் அவர், முழுக்க முழுக் கக் கதாபாத்திரத்தை முன்னிறுத் தும் வேடத்திலும் ஜொலிக்கி றார். அளவான ஒப்பனை அவரது பாத்திரத்தின் நம்பகத்தன்மை யைக் கூட்டுகிறது.

அப்சராவின் தோழியாக வரும் ஸ்வாதி, ஓவியராக வரும் ஆரி, திரைப்பட இயக்குநரான மைம் கோபி ஆகியோர் வெகு இயல் பாகத் தத்தமது கதாபாத்தி ரங்களைக் கையாள்கிறார்கள்.

நாமும் மாயவனத்துக்குள் வந்துவிட்டோமோ என்ற உணர் வைத் தந்துவிடுகிறது சத்தியன் சூர்யனின் ஒளிப்பதிவு. காட்சிகளுக்கு ஏற்ற கச்சிதமான பின்னணி இசையைத் தந்திருக் கிறார் ரோன் ஈதன் யோகன்.

பேய்க் கதை என்றாலும் தாய்மையின் தவிப்பே கதையின் அடிநாதம். வஞ்சிக்கப்படும் பெண் களின் கதையே மாயவனமாக விரிகிறது.

இத்தகைய கதைக்குப் பெண் பாடலாசிரியர்களையே தேர்வுசெய்தது பாராட்டத்தக்கது. ‘ஆயிரம் ஆயிரம்’, ‘தூங்கா கண்கள்’ ஆகிய பாடல்களை எழுதிய குட்டி ரேவதி, ‘நானே வருவேன்’ பாடலை எழுதிய உமாதேவி இருவரும் கதாபாத்தி ரங்களின் வலியை எளிமையும் உருக்கமுமாகப் பிரதிபலித்தி ருக்கிறார்கள். படத்தின் ஓட்டத் துக்குக் குறுக்கே வராத வண்ணம் பாடல்களை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார்.

நேர்த்தியான திரைக்கதை அமைப்பு, சிறந்த நடிப்பு, வலுவான காட்சிகள் ஆகியவற்றுடன் மாயா உண்மையிலேயே வித்தியாசமான பேய்ப் பட அனுபவத்தைத் தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x